கொரோனா காலத்தில் சிறந்த பங்காற்றியவர்கள் அன்னையர்; மத்திய மந்திரி புகழாரம்


கொரோனா காலத்தில் சிறந்த பங்காற்றியவர்கள் அன்னையர்; மத்திய மந்திரி புகழாரம்
x
தினத்தந்தி 9 March 2021 3:48 AM IST (Updated: 9 March 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த பங்காற்றியவர்கள் அன்னையர் என மத்திய மந்திரி நிஷாங்க் பொக்ரியால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச மகளிர் தினத்தில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் இணையவழி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த முறையில் பங்காற்றியவர்கள் அன்னையர் என புகழ்ந்து கூறினார்.

பெண்கள் அறிவியல், தொழில் நுட்பம், ஆராய்ச்சி, இலக்கியம் மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றில் சிறப்புடன் செயலாற்றுபவர்கள் என்றும் தலைமைத்துவ பண்பில் உயர்ந்த தரத்தினை வெளிப்படுத்துபவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்கள் ஆகியவற்றில் சேரும் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து உள்ளது என பாராட்டிய நிஷாங்க், தேசிய கல்வி கொள்கை 2020 ஆனது நம்முடைய சமூகத்தில் பெண்களின் கண்ணியம் மேம்பட தேவையான ஆற்றலை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Next Story