இந்தியாவில் 2.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் 2.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 9 March 2021 11:12 AM IST (Updated: 9 March 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இதுவரை 2.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் 65-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2.3 கோடியாகும். 


Next Story