வேலைவாய்ப்பு, முதலீடு குறித்து மம்தா பேசவேண்டும் - பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி பேச்சு

வேலைவாய்ப்பு, முதலீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மம்தா பானர்ஜி பேசவேண்டும் என்று நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.இதில் முதல்மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடக்கம். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்கி உள்ளார். இதனால், நந்திகிராம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக் உள்ளது.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தங்கள் கட்சியை சேர்ந்த கோபால் முஜூம்தர் என்பவரின் தாயார் ஷாவா முஜூம்தர் என்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாவா முஜூம்தர் நேற்று (மார்ச் 29-ம் தேதி) உயிரிழந்துவிட்டார் என்று பாஜக குற்றஞ்சுமத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீதும் மம்தா பானர்ஜி மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்து வருகிறார்.
இது தொடர்பாக, நந்திகிராம் தொகுதியில் பிரசாரத்தின்போது இன்று பேசிய மம்தா பானர்ஜி, மேற்குவங்காள அரசு மீது பழி சுமத்துவதற்காக பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து அவர்கள் கொண்டுவந்துள்ள கும்பல்களை கொண்டு தங்கள் சொந்த கட்சியை சேர்ந்த ஒரு பெண்ணை கொல்ல பாஜக மற்றொரு திட்டம் தீட்டியுள்ளது. இதுதான் பாஜகவின் திட்டம்’ என்றார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளுக்கு நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறுகையில், மம்தா பானர்ஜி பொய் சொல்லும் பழக்கத்தை கொண்டுள்ளார். அவர், வேலைவாய்ப்பு, முதலீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசவேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story