கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கலால்துறை மூலம் ரூ.22,700 கோடி இலக்கு எட்டப்பட்டது


கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கலால்துறை மூலம் ரூ.22,700 கோடி இலக்கு எட்டப்பட்டது
x
தினத்தந்தி 31 March 2021 2:36 AM IST (Updated: 31 March 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கலால்துறை மூலம் ரூ.22,700 கோடி இலக்கை எட்டியுள்ளோம் என்று மந்திரி கோபாலய்யா கூறினார்.

பெங்களூரு: கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கலால்துறை மூலம் ரூ.22,700 கோடி இலக்கை எட்டியுள்ளோம் என்று மந்திரி கோபாலய்யா கூறினார்.

கலால்துறை மந்திரி கோபாலய்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருள் நடமாட்டம்

கர்நாடகத்தில் 2020-21-ம் ஆண்டில் கலால்துறை மூலம் வருவாயாக ரூ.22 ஆயிரத்து 700 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் குறித்த காலத்திற்கு முன்னரே இந்த வருவாய் இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். அதை விட ரூ.500 கோடி வரை கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீஸ் துறையுடன் கலால்துறை இணைந்து செயலாற்றி வருகிறது.

போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டுபிடித்து அதுகுறித்து கலால்துறையினர் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. கலால்துறை எம்.எஸ்.ஐ.எல். மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும். எங்கள் துறைக்கு தேவையான கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், துப்பாக்கிகள் வழங்குவதாக முதல்-மந்திரி உறுதி அளித்து உள்ளார். 

சானிடைசர் உற்பத்தி

கலால்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். சானிடைசர் உற்பத்தி செய்ய சொன்னால், அதை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கோபாலய்யா கூறினார்.

Next Story