ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்


ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 31 March 2021 1:26 PM GMT (Updated: 31 March 2021 1:26 PM GMT)

ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறுகையில்,

ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று 8 பேருடன் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள மன்பாலில் இருந்து உதம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 2 தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் 4 பயணிகள் உள்பட 8 பேர் இருந்தனர். பின்னர், தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் காலை 10.45-க்கு புறப்பட்டுச் சென்றது.

Next Story