ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள்: வருமானவரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்த பயனர்கள் முடங்கிய வலைதளம்!


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள்: வருமானவரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்த பயனர்கள் முடங்கிய வலைதளம்!
x
தினத்தந்தி 31 March 2021 7:27 PM IST (Updated: 31 March 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் வருமானவரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு பயனர்கள் படையெடுத்ததால் வலைத்தளம் முடங்கியது.

சென்னை,

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டது. தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அபராத தொகையும் செலுத்த வேண்டி உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு காலையில் இருந்தே படையெடுத்தனர்.

ஒரே நேரத்தில் பலர் வலைதளத்தை அணுகியதால் அந்த பக்கம் திடீரென முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். தொடர்ந்து முடங்கிபோன வலைத்தளம் இயல்பு நிலைக்கு திரும்பி செயல்பட்டு வருகிறது. 

அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் இந்த அபராதத்தை அரசு விதித்துள்ளது. இதற்கென வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.

ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது எப்படி

முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும்.
அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar' என்ற மெனுவைக் காணலாம். அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கும்.

அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். அதார் எண்ணையும் பான் கார்டையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்தாயிற்று.

அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்' செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar' பட்டனைக் கிளிக் செய்யவும்.

கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் வருமான வரித்துறை சார்பில் தகவல் வரும்.

Next Story