2021-2022 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதம் வளர்ச்சி அடையும் - உலக வங்கி கணிப்பு


2021-2022 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதம் வளர்ச்சி அடையும் - உலக வங்கி கணிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 10:17 PM IST (Updated: 31 March 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

2021-2022 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் (2021-2022) தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு அறிக்கையை உலக வங்கி இன்று வெளியிட்டது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதத்துக்கு மேல் வளரும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், 6 சதவீத வளர்ச்சிதான் இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது. தற்போது, 10 சதவீதத்துக்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று கணித்துள்ளது.

அதே சமயத்தில், வளர்ச்சி சீரற்றதாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே பொருளாதார நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், வங்காளதேசம் 3.6 சதவீதமும், நேபாளம் 2.6 சதவீதமும், பாகிஸ்தான் 1.3 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Next Story