கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது மந்திரி பரபரப்பு புகார்
எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி கட்சி மேலிடத்திற்கு புகார் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அவரது மந்திரிசபையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக இருக்கும் ஈசுவரப்பா பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், முதல்-மந்திரி எடியூரப்பா நிதித்துறையை கவனித்து வருகிறார். எனக்கே தெரியாமல் எனது துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறார். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட துறை மந்திரியான என்னை முற்றிலுமாக புறக்கணித்துள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் ஈசுவரப்பா கடிதம் அனுப்பி இருக்கிறார். எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி கட்சி மேலிடத்திற்கு புகார் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story