கொரோனா அச்சுறுத்தல்: விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு


கொரோனா அச்சுறுத்தல்: விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு
x
தினத்தந்தி 1 April 2021 6:14 AM IST (Updated: 1 April 2021 6:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக விமான நிலையங்களில் இன்று முதல் (வியாழக்கிழமை) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.


புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கொரோனாவின் 2 வது அலை என்று இதனை கூறுகிறார்கள். தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விமான நிலையங்களிலும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  விமான பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

மேலும்,   விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story