கொரோனா பாதிப்பு உயர்வு: பெங்களூருவின் நகர்ப்புறத்தில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகள் ரத்து; கல்வி மந்திரி பேட்டி
பெங்களூருவின் நகர்ப்புறத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு 6 முதல் 9 வரையிலான வகுப்புகள் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என கல்வி மந்திரி கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதனை முன்னிட்டு அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் எடியூரப்பா தலைமையிலான அரசு தீவிர பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள முதன்மை கல்வி மந்திரி சுரேஷ் குமார் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார்.
அதில், கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தின் நகர்ப்புறத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழல் காணப்படுகிறது. இதனை முன்னிட்டு 6 முதல் 9 வரையிலான வகுப்புகள் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story