காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையேயான என்கவுண்ட்டர் தொடங்கியது
ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று காலை என்கவுண்ட்டரில் ஈடுபட்டு உள்ளனர்.
புல்வாமா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ககபோரா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுண்ட்டர் தொடங்கி நடந்து வருகிறது.
இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் இன்று காலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புல்வாமாவின் ககபோரா பகுதியில் என்கவுண்ட்டர் தொடங்கியுள்ளது. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பணியில் உள்ளனர். பிற விசயங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story