ராபர்ட் வதோராவுக்கு கொரோனா - தனிமப்படுத்திக்கொண்டார் பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோராவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளதால் மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோராவுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ராபர்ட் வதோராவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு கொரோனா பரவவில்லை. இதையடுத்து, ராபர்ட் வதோராவும், அவரது மனைவி பிரியங்கா காந்தியும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story