பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தீவிரமாகியுள்ளது. நகரில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000 என்ற அளவில் பதிவாகி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் பள்ளிகளை மூடுவதாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் உடனடியாக மூடப்படுவதாகவும், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பள்ளிகள் வகுப்புகளை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 6 முதல் பி.யூ.கல்லூரி வரை உள்ள வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story