கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? வெளியுறவுத்துறை விளக்கம்


கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? வெளியுறவுத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 3 April 2021 9:05 AM IST (Updated: 3 April 2021 9:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு கொரோனா  தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  அரிந்தம் பாக்ச்சி  செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். 

அப்போது  அவர்  கூறியதாவது: -  கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை.  தற்போது வரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளோம். 

இதுவரை மொத்தம் 6.44 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1.04 கோடி தடுப்பூசிகள் நன்கொடையாகவும், 3.57 கோடி தடுப்பூசிகள் வா்த்தக ரீதியிலும், 1.82 கோடி தடுப்பூசிகள் கோவேக்ஸ் திட்டத்தின் கீழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் அதேவேளையில், உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்வதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது” என்றார். 

Next Story