மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு


மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 3 April 2021 9:28 PM GMT (Updated: 3 April 2021 9:28 PM GMT)

மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு வரமுடியும் என்று தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

அமோக வெற்றி

புதுவை லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று மாலை மகாவீர் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க., என்ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் நிறைய கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உதவி செய்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும். சிறிய பகுதியான புதுச்சேரியில் விற்பனை வரி, கலால் வருமானம் மட்டும் தான். வேறு ஒன்றும் கிடையாது.

மத்திய அரசு ஒத்துழைப்பு

படிக்கிற பிள்ளைகளுக்கு வேலை இல்லை. பி.டெக் படித்து விட்டு ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு ஜவுளி கடையில் பில் போடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலை தான் புதுச்சேரியில் இருக்கிறது. இதையெல்லாம் நாம் வந்து மாற்ற வேண்டும். மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும். இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story