மராட்டியத்தில் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்
மராட்டியத்தில் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவாக கிட்டதட்ட 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு சிந்தித்து வருகிறது.
ஆனால், ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், மராட்டியத்தில் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
Related Tags :
Next Story