மும்பையில் கொரோனா சிகிச்சை மையங்களில் அதிக படுக்கை வசதிகள் - மாநகராட்சி நடவடிக்கை
கொரோனாவை சமாளிக்க மும்பையில் உள்ள சிகிச்சை மையங்களில் அதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சமீபநாட்களாக கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையை நோய் தொற்று ஆட்டி படைத்து வருகிறது. நேற்று மட்டும் தலைநகரில் 11 ஆயிரம் பேருக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தேவையை கருத்தில் கொண்டு மும்பையில் மேலும் படுக்கை வசதிகளை அமைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஐ.ஏஸ். சாகல் கூறியதாவது:-
“மும்பை நகரில் நேற்று வரை 4 ஆயிரத்து 160 படுக்கைகள் காலியாக உள்ளன. இந்தநிலையில் அவசர கால நடவடிக்கையாக மும்பையில் உள்ள கொரோனா மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கைகளை அடுத்த 7 நாட்களுக்குள் அமைப்போம். இதில் 400 அவரச சிகிச்சை படுக்கைகளும் அடங்கும்.
சில நோயாளிகள் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை மோசமாகிறது. எனவே அவர்கள் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story