மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்


மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்
x
தினத்தந்தி 5 April 2021 12:34 AM GMT (Updated: 5 April 2021 12:34 AM GMT)

மராட்டியத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த கொரோனா நோயாளியான பெண்ணின் உறவினர்கள் ரிசப்சன் பகுதியை தீ வைத்து கொளுத்தினர்.

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

இதனால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் முதலில் டாக்டரிடம் இதுபற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  பின்னர் உறவினர்கள் சூழ அந்த மருத்துவமனையின் ரிசப்சன் பகுதியை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதுபற்றி துணை ஆணையாளர் லோகித் கூறும்பொழுது, பெண்ணின் கணவரது உறவினர்களில் ஒருவர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.  இதன்பின் ரிசப்சனில் இருந்த மேஜை மீது தீ வைத்துள்ளார்.

உடனடியாக, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர்.  சி.சி.டி.வி.யில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரில் 10 பேரை கைது செய்து உள்ளோம் என கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.  அதன்பின் பெண்ணின் உடலை தராமல் ரூ.1.5 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.  இதில், ஏற்பட்ட ஆத்திரத்திலேயே தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

Next Story