உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்


உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
x
தினத்தந்தி 5 April 2021 8:48 AM IST (Updated: 5 April 2021 8:48 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்

லக்னோ,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் 45-வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.  

கடந்த 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பரவலும் நாட்டில் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனையில் யோகி ஆதித்யநாத்திற்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-  தடுப்பூசியை இலவசமாக கிடைக்க செய்த பிரதமர் மோடிக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

நாட்டில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. வாய்ப்பு வழங்கப்படும் போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.


Next Story