கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி
x
தினத்தந்தி 5 April 2021 3:42 PM IST (Updated: 5 April 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

மத்தியப் பிரதேசத்தில் 118 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி கூறுகையில்,

நான் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். என்னைப்போன்று அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

மூதாட்டி 1903 ஜனவரி 1-இல் பிறந்துள்ளார். ஆதார் அட்டையின்படி சதர்பூர் கிராமத்தில் வசிப்பர் என்றும் மருத்துவர் பூபேந்திர குர்மி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால், கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் தெரிவித்தார்.

Next Story