கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
கேரளாவில் இன்று (திங்கள் கிழமை) 2,357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.37 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனாவில் இருந்து இன்று மேலும் 1,866 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 04 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28,372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,191 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,680 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story