உத்திர பிரதேசத்தில் இன்று புதிதாக 3,999 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

உத்திர பிரதேசத்தில் இன்று புதிதாக 3,999 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்திர பிரதேச சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று மேலும் 3,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,34,033 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,894 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,02,319 ஆக உயர்ந்துள்ளது. உத்திர பிரதேசத்தில் தற்போது 22,820 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாநிலத்தில் இதுவரை 3.55 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உத்திர பிரதேச சுகாதார துணை செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உத்திர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story