மேற்கு வங்காளத்தில் காலை 11.30 மணி வரை 34.71 சதவீத வாக்குகள் பதிவு


மேற்கு வங்காளத்தில் காலை 11.30 மணி வரை  34.71 சதவீத  வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 12:22 PM IST (Updated: 6 April 2021 12:22 PM IST)
t-max-icont-min-icon

காலை 11.30 மணி வரை மேற்கு வங்காளத்தில் சுமார் 34.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் 337 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். 

அதே சமயம் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 9:11 மணி வரை  மேற்கு வங்காளத்தில்  - 4.88 சதவீத வாக்குகளும் அசாமில் - 0.93 சதவீத  வாக்குகளும் பதிவாகி உள்ளது.

காலை 11.30 மணி வரை மேற்கு வங்காளத்தில் சுமார் 34.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Next Story