தேசிய செய்திகள்

கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு + "||" + BJP a ‘movement that connects people’, not a ‘poll-winning machine’, says PM Modi

கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,

பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது, 

’தனிநபரை விட கட்சி பெரியது; கட்சியை விட தேசம் பெரியது என்று நான் எப்போதும் நம்புகிறேன். பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி காலம் முதல் இன்றுவரை பா.ஜ.க.வின் பாரம்பரியம் பேணி பாதுகாக்கப்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயம். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். காஷ்மீருக்கு அரசியலமைப்பு உரிமையை வழங்கியுள்ளோம்.பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
2. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
3. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
4. அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
5. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.