தேசிய செய்திகள்

கொரோனா ஒருநாள் பாதிப்பு; உலக அளவில் முதலிடத்தில் இந்தியா + "||" + Daily Covid-19 case count crosses 1 lakh

கொரோனா ஒருநாள் பாதிப்பு; உலக அளவில் முதலிடத்தில் இந்தியா

கொரோனா ஒருநாள் பாதிப்பு; உலக அளவில்  முதலிடத்தில் இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.  

இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால், ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம்- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரேசிலில் 82 ஆயிரத்து 869- பேருக்கும், அமெரிக்காவில் 62,283-  பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொருத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,211- பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631- பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
2. முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் இயங்கலாம்: தமிழக அரசு
காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 37,290- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. முதல்-அமைச்சருடன் சந்திப்பு: ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும்; டாக்டர் ரேலா கருத்து
ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு டாக்டர் ரேலா தெரிவித்தார்.