திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு
திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு
அகர்தலா,
திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேப் - கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிப்லாப் குமார் தேப் அதில் கூறியிருப்பதாவது: - எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். திரிபுராவில் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story