உத்தரகாண்ட்: ஐஐடி ரூர்க்கியில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


உத்தரகாண்ட்: ஐஐடி ரூர்க்கியில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 April 2021 10:27 PM IST (Updated: 7 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐஐடி-யில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டராடூன்,

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை சந்தித்து வருகிறது. தினமும் சராசரியாக 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், உத்தரகாண் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி நகரில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) அமைந்துள்ளது. இங்கு நுற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஐஐடி ரூர்க்கியில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை ஐஐடி ரூர்க்கியில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   

Next Story