இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே 5 நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார்


இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே 5 நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார்
x
தினத்தந்தி 8 April 2021 9:32 AM IST (Updated: 8 April 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே 5 நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, வங்கதேசத்திற்கு நட்பு ரீதியலான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று ராணுவ தளபதி முகுந்த் நரவனே 5 நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்வதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அண்மையில் வங்கதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு வங்கதேச பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story