மத்திய பிரதேசத்தில் நாளை மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் நாளை மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 9:27 AM GMT (Updated: 8 April 2021 9:27 AM GMT)

மத்திய பிரதேசத்தில் நாளை மாலை 6 மணி முதல் வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போபால்,

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதனால் பல மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. 

கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இன்றைய தினம் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மராட்டிய மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தைத் தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் நாளை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இரண்டு நாட்கள் நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில், தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Next Story