இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்


இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்
x
தினத்தந்தி 30 April 2021 10:01 AM IST (Updated: 30 April 2021 10:01 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனா பாதிப்பினால் இன்று காலமானார்.

புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி.  கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  அவருக்கு வயது 91.  இந்தியாவின் உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர்.  கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் பாம்பே ஐகோர்ட்டில் வழக்கறிஞர் பயிற்சியை பெற்றுள்ளார்.

இதன்பின்னர் கடந்த 1971ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞரானார்.  கடந்த 1989ம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார்.  இதன்பின்பு கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.


Next Story