பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி


பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி
x
தினத்தந்தி 30 April 2021 3:03 PM IST (Updated: 30 April 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

பாட்னா,

நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.  இந்நிலையில், பீகார் தலைமை செயலாளர் அருண் குமார் சிங் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து பாட்னா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் இன்று உயிரிழந்து உள்ளார்.


Next Story