ராஜஸ்தானில் இன்று 17,155- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ராஜஸ்தானில் இன்று மேலும் 17,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்,
ராஜ்ஸ்தானில் இன்று மேலும் 17,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10,034- ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருநாளில் மட்டும் 155- பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 485- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 17 ஆயிரத்து 277- ஆகும். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,239- ஆக உள்ளது.
Related Tags :
Next Story