கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் தொடர்பில் இருந்த சில அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆதித்யநாத்தும் கடந்த 13-ந் தேதி முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
மறுநாள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் வீட்டிலேயே சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.
இதன் பலனாக அவருக்கு தற்போது கொரோனா குணமடைந்துள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘உங்களின் (மக்கள்) நல்வாழ்த்துகளினாலும், டாக்டர்களின் கவனிப்பாலும் தொற்றில் இருந்து நான் மீண்டுள்ளேன். உங்களின் ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துதலுக்காக நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story