குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து; 12 பேர் உயிரிழப்பு


குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து; 12 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 May 2021 7:22 AM IST (Updated: 1 May 2021 7:22 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பரூச்,

குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறைக்கு 1 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.

இதன்பின்னர் பட்டேல் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரா கூறும்பொழுது, ஐ.சி.யூ.வில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த தீ விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டு  இருக்க கூடும் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  எனினும், முழு விவரம் வெளிவந்த பின்னரே அவற்றை பற்றி கூற முடியும் என தெரிவித்து உள்ளார்.


Next Story