கேரள சட்ட சபை தேர்தல் முடிவுகள்; திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை
கேரளவில் திருச்சூர்தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுகு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் ஆளும் இடது சாரி முன்னணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் தலைமையிலான இடது சாரி முன்னணி 89 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதில், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார். கேரள முன்னாள் முதல் மந்திரி கே கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
Related Tags :
Next Story