தேசிய செய்திகள்

மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி: ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்’; ராகுல் காந்தி அறிவிப்பு + "||" + Defeat in state assembly elections: Rahul Gandhi declares ‘We humbly accept the verdict of the people’

மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி: ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்’; ராகுல் காந்தி அறிவிப்பு

மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி: ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்’; ராகுல் காந்தி அறிவிப்பு
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி, போட்டியிட்ட தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது.

குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ள அந்த கட்சி புதுச்சேரி, அசாமிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. மேலும் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிட்ட மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்துள்ளது.இது கட்சியினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த தேர்தல் களத்தில் எங்களுக்கு ஆதரவை வழங்கியவர்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் உண்மையிலேயே நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களுக்காக தொடர்ந்து போராடுவோம். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
2. கொரோனா உயிரிழப்புகள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
3. கொரோனா வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் - ராகுல்காந்தி
எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. நமது மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம்
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிடம் தற்போதுவரை எந்த திட்டமும் இல்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.