தேசிய செய்திகள்

டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா + "||" + Delhi need 976 MT oxygen daily as we are increasing the number of beds Delhi Deputy CM Manish Sisodia

டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா

டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா
டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆக்சிஜன் பற்றக்குறையை போக்க மத்திய அரசும், கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லி தேவையை விட குறைவாகவே ஆக்சிஜன் பெறுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சிசோடியா கூறுகையில்,

18-45 வயதிற்கு உள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் 301 மையங்களில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை அதிகம் பெறும் பட்சத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். 

மே 1-ம் தேதி 4.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுள்ளோம். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். இன்று 45,150 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். பதிவு செய்துள்ளவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என நம்பிக்கை உள்ளது.

ஆக்சிஜனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல எங்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு, தனியார் அமைப்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் உதவி கேட்டுள்ளோம்.

டெல்லி நேற்று 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெற்றது. ஆனால், அது ஒதுக்கப்பட்ட 590 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விட குறைவு. கொரோனா படுக்கைகள் அதிகரித்து வருவதால் எங்களுக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் தேவைப்படுகிறது’

என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது
டெல்லியில் 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.
4. டெல்லி: கொரோனா வார்டில் பணியாற்றிய வந்த மருத்துவர் தற்கொலை
டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.
5. கொரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் காரிலேயே உயிரிழந்த பெண்
கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் 35 வயது நிரம்பிய பெண் காரிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.