டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது


டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2021 10:37 AM GMT (Updated: 3 May 2021 10:37 AM GMT)

டெல்லியில் 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை, மருந்து வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதனை சாதகமாக பயன்படுத்தி ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் செயல்களும் அரங்கேறி வருகிறது. இந்த கள்ளசந்தை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஒரு கும்பல் கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளசந்தையில் விற்பனை செய்ய முயன்ற 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 115 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 கார்கள், 4,90,000 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story