மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை; கோல்ப் மைதானத்தை மூட உத்தரவு


மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை; கோல்ப் மைதானத்தை மூட உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2021 12:48 AM IST (Updated: 4 May 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் அதிவேக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

குறிப்பாக மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசமான சத்தாரா மாவட்டம் மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த மைதானத்தை மூட மகாபலேஷ்வர் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Next Story