கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
சாம்ராஜ் நகர்,
சாம்ராஜ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துவிட்டதாக புகார் எழுந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு ஒரு புறம், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமே நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story