பீகாரில் 15-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு; முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தினத்தோறும் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீகாரில் வரும் 15-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது.
Related Tags :
Next Story