தேசிய செய்திகள்

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிப்பு; மத்திய மந்திரி அறிவிப்பு + "||" + Increase in remdecivir production; Announcement by the Union Minister

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிப்பு; மத்திய மந்திரி அறிவிப்பு

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிப்பு; மத்திய மந்திரி அறிவிப்பு
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்து தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த ஏப்ரல் 12-ந் தேதியையொட்டி மாதம் 37 லட்சம் குப்பிகளாக இருந்த ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி, மே முதல் வாரத்தில் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு 1.05 கோடி குப்பிகளாக உயர்ந்துள்ளது.ஒரு மாதத்துக்கு முன்பு நாடு முழுவதும் 20 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரெம்டெசிவிர், தற்போது 57 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதை உற்பத்தி செய்யும் திறன் 3 மடங்கு அதிகரித்துள்ளது. விரைவிலேயே நம்மால், அதிகரித்திருக்கும் தேவைக்கு ஏற்ப இம்மருந்தை வழங்க இயலும்.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து மத்திய அரசு கடுமையாகப் போராடி வருகிறது.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை
2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.
2. அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி துணை நிற்கும் மத்திய மந்திரி பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மீண்டும் வரவிருக்கிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) துணை நிற்கும் என்று சென்னையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அதுவாலே கூறினார்.
3. அடுத்த 3 மாதங்களில் மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் மத்திய மந்திரி தன்வே கூறுகிறார்
மராட்டியத்தில் அடுத்த 3 மாதங்களில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.