பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுவதை விட்டு மக்கள் உயிரை காப்பாற்ற பணத்தை செலவிடுங்கள்; பிரியங்கா வலியுறுத்தல்


பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுவதை விட்டு மக்கள் உயிரை காப்பாற்ற பணத்தை செலவிடுங்கள்; பிரியங்கா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2021 1:03 AM IST (Updated: 5 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரமாண்ட மத்திய செயலகம், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் ஆகியவை ரூ.13 ஆயிரத்து 450 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் புதிய இல்லம் கட்டுமான பணி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று மத்திய பொதுப்பணித்துறை நேற்று முன்தினம் தெரிவித்தது.

இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கைகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவில் புதிய இல்லம் கட்டுவதற்கு பதிலாக, எல்லா பணத்தையும் மக்கள் உயிரை காப்பாற்றுவதற்கு செலவிட்டால் நன்றாக இருக்கும். இதுபோன்ற கட்டுமான செலவுகள், மத்திய அரசு வேறு பணிகளுக்குத்தான் முன்னுரிமை அளிப்பதாக மக்களை எண்ண வைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story