கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு
கர்நாடகாவில் 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
நாட்டில் மராட்டியத்திற்கு அடுத்து அதிக அளவாக கர்நாடகாவில் (44,438 பேருக்கு) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி கர்நாடக கல்வி மந்திரி சூரியநாராயண சுரேஷ் குமார் கூறும்பொழுது, 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, 2ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக வாரிய தேர்வுகளையும் தள்ளி வைப்பது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மாணவர்களை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story