கொரோனா பரிசோதனைக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகள் நல்ல உடல் நிலையுடன் இருந்தால் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் உள்ளதால் நாடு முழுவதும் உள்ள 2,500 - மேற்பட்ட ஆய்வுக்கூடங்களில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்கள் பயணங்களின் போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story