மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி


மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 5 May 2021 11:02 AM IST (Updated: 5 May 2021 11:02 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3-வது முறையாக பதவியேற்றார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார், மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று  காலை பதவியேற்றார். 

 கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


Next Story