கொரோனா பாதிப்பு: பெங்களூரில் நாளுக்கு நாள் நிலைமை மோசம்; கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை


கொரோனா பாதிப்பு:  பெங்களூரில் நாளுக்கு நாள் நிலைமை மோசம்;  கள்ளச்சந்தையில்  மருத்துவமனை படுக்கைகள் விற்பனை
x
தினத்தந்தி 5 May 2021 3:20 PM IST (Updated: 5 May 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம் நடைபெறுகிறது.

பெங்களூரு: 

பெங்களூரில் கொரோனா பாதிப்பு  நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு நபரும் கோரோனா நோயாளியாக மாறி வருகின்றனர்: நகரத்தின் நேர்மறை விகிதம் திங்களன்று 55% ஆக உயர்ந்து உள்ளது. இந்த விகிதம் ஒரு நாளுக்கு முன்  33% ஆக இருந்தது.  சிகிஒச்சையில் உள்ள நோயாளிகள்  மூன்று லட்சத்தை எட்டி உள்ளது.

செவ்வாயன்று, கர்நாடகாவின் மொத்த எண்ணிக்கையான 44,632 புதிய தொற்றுநோய்களில் 20,870 கோவிட்-பாசிட்டிவ் வழக்குகள் மற்றும் 132 இறப்புகள் மற்றும் 292 இறப்புகள் எப்போதும் பதிவாகியுள்ளன.

பெங்களூருவில் நேற்றுய் அதிகபட்சமாக ஒரே நாளில் 21,199 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 365 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 37,733 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 21,149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது. 

பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்க்கும் அவலத்தை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொரோனா கொடூரம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் இதை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக மருத்துவமனை படுக்கைகளையே கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவில் மருத்துவமனைகளில் படுக்கைகளை போலி பெயர்களில் பதிவு செய்து, அவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கும் கொடுமை நடப்பதாக பா.ஜனதா கட்சி எம்பியான தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 80 சத்வீத  படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 4,065 படுக்கைகள் பதுக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சை பெற சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில் பணம் படைத்தவர்கள், பதுக்கப்பட்டுள்ள இப்படுக்கைகளை அதிக விலை கொடுத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Next Story