இஸ்ரேல் அனுப்பி வைத்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது.
டெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சிகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன.
அந்த வரிசையில், இந்தியாவுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது. இஸ்ரேலில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருந்துப்பொருட்களின் முதல் தொகுப்பு தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்துள்ளது.
மேலும், மருத்துவ உதவிகள் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் நண்பர் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இஸ்ரேல் மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரர் ரோன் மால்வா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story