மேற்கு வங்காளத்தில் 18 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு


மேற்கு வங்காளத்தில் 18 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 May 2021 11:54 PM IST (Updated: 5 May 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 18,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் மேலும் 18,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,16,635 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 103 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 11,847 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 17,073 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 1,21,872 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 


Next Story