ஆந்திர மாநிலத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர மாநிலத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும். அதன் பிறகு நண்பகல் 12 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த பகுதி நேர ஊரடங்கானது மே 18 ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பணிமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதேபோல் தெலுங்கானா, கர்நாடக மாநில எல்லைகளும் மூடப்பட்டன.
Related Tags :
Next Story